26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CinemaCinema News

பிக்பாஸ் சீசன் 6 :- நீங்களாவே கற்பனை பண்ணிக்காதீங்க, அது ஒரு நாளும் நடக்காது ! ஷிவினிடம் விக்ரமன் ஆவேசம்..!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி பல சுவாரஸ்யங்களுடன் , விறுவிறுப்பாக 66 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இன்றைய நாளின் எபிச்சோடில் ஆரம்பத்தில் மைனா நந்தினி, மணிகண்டன் மற்றும் ஷிவின் மூவரும் பேசிக்கொண்டிருந்த பொழுது, மைனா விக்ரமன் அநாவசியமாக யாரும் சமைக்கும் பொழுது வரக்கூடாது என சொல்லியிருந்ததை பகிருந்து கொண்டார். அவ்வப்பொழுது ஷிவின் அநாவசியமாக வந்தது தான் இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறியதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு ஷிவின் மைனாவிடம், நான் அநாவசியமாக தலையிட்டேன்னா? அவர்கள் தான் என்னை ருசி பார்க்க அழைத்தார்கள் இப்பொழுது என் மீதே தவறான குற்றச்சாட்டை வைக்கிறார்கள் நான், இதைப்பற்றி விக்ரமனிடம் கேட்பேன் என மைனாவிடம் கூறுகிறார் ஷிவின், அதற்கு மைனாவும் கேள் என்று தான் சொன்னேன் என்றவுடன், ஷிவின் நேராக விக்ரமனிடம் சென்று சமைக்கும் பொழுது நான் அநாவசியமாக வந்ததாக குற்றம்சாடியுள்ளீர்களே , என்ன நடந்தது என்பதை முழுவதுமாக தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார்.

See also  பிக்பாஸ் சீசன் 6:- இத்தனை நாள் இந்த வீட்டில் என்ன செய்தீங்க? போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பிக்பாஸ்!

இதனை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதங்கள் முற்றிக்கொள்ள விக்ரமன் ஷிவினிடம் நீங்கள் என்ன கற்பனை செய்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது , அது நடக்காது என ஆவேசமாக பதிலளித்தார். இதற்கு ஷிவின் நான் உங்களை ஒன்றும் கற்பனை செய்யவில்லை, என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள் தான் என்றேன் என பதிலளித்துவிட்டு கோவமாக சென்று மைனாவிடம் இனி கிச்சன் டீமில் அவர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் என்னிடம் கேட்கவே வேண்டாம் உன்னிடம் சொல்லச் சொல் நான் உனக்கு பதிலளிக்கிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதற்கு பின்னதாக விக்ரமன் ஏடிகேவிடம் ஷிவின் ஏன் ஒரு சாதாரணமான விஷயத்தை இவ்வளவு டீடெயிலாக எடுத்து கொள்கிறார்கள் என தெரியவில்லை என கூறிவிட்டு, ஷிவினிடம் சென்று நான் அந்த அர்தத்தில் உங்களை ஏதும் கூறவில்லை, தவறாக தோன்றியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் ஷிவின் என விக்ரமன் கூறினார்.

See also  பிக்பாஸ் சீசன் 6 :- பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் போட்டியாளர்!

Related posts