விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் , தற்போது ஆறாவது சீசன் வெற்றிநடை போட்டு வருகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் எலிமினெட் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 11 வாரங்களை கடந்த நிலையில் தற்போது 9 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த வார நாமினேஷனில் தனலட்சுமி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் பிக்பாஸ் ரசிகர்கள் தனலட்சுமி வெளியேறியதற்கு நன்றாக விளையாடுபவர்களை எல்லாம் வெளியேற்றி விட்டு யாருக்கு அந்த டைட்டிலை கொடுக்கப் போறீங்க எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேற்றைய தினம் மைனா வெளியேறி இருந்தா; நன்றாக இருந்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் மைனா நந்தினியை விட பல மடங்கு தனலட்சுமி நன்றாக தான் விளையாடி வந்தார் எனவும் சிலர் எப்பொழுதுமே நடிகர் கமல் விக்ரமனுக்கு ஆதரவாக தான் பேசிக்கொண்டே இருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.
இதனிடையே இன்றைய நாளின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. அதில் யார் இந்த வீட்டி இருக்க கூடாது என நினைக்கிறார்களோ அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக்பாஸ் கூறியதை தொடர்ந்து பல ரெட் கார்டுகள் அசீம் , ஷிவின் என செல்ல விக்ரமன் மட்டும் மைனாவிற்கு கொடுக்கிறார்.
இதனை தொடர்ந்து மைனா விக்ரமனிடம் நீங்கள் கொடுத்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது என்றார். இது குறித்து மைனா அவரிடம் கேட்ட கேள்விக்கு விக்ரமனும் விளக்கம் கொடுத்தார். இதையடுத்து மைனா நந்தினி நான் செய்தால் தப்பு என நாமினேட் பன்றீங்க, இதுவே தான் ஷிவினும் செய்தாள் ஆனால் அது தப்பு இல்லையா உங்க பார்வைக்கு என விக்ரமனை விளாசி தள்ளுகிறார் மைனா. இதற்கு விக்ரமன் என்ன பதில் சொல்லலாம் என திரு திரு என முழிப்பது போன்ற ப்ரோமவை வெளியிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை அதிகளவு கவர்ந்து வருகிறது.