விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்று கொண்டிருந்த பொழுதே, நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனை தொடர்ந்து வாரிசு படம் வெளியானதும் , மறுபக்கம் தளபதி 67 க்கான படப்பிடிப்புகள் சென்னையில் முதலில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 குறித்த அப்டேட்டுகள் கேட்கப்பட்டது, இதுகுறித்து பாத்து நாட்களில் அப்டேட்டுகள் தெரிவிக்கப்படும் என்றார்.
இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் போன்ற முக்கிய நடிகர்கள் பலர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஒருவரும் தளபதி 67 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவர் யாரென்றால் பிக்பாஸ் ஜனனி!, சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனில் வெளியேறினார், இருப்பினும் வெளியேறிய சிறிது நாட்களிலேயே இப்படிப் பட்ட பெரிய நட்சத்திரத்தின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனனியிடம் கேள்வி எழுப்பியதற்கு இது குறித்து நான் பதிலளிப்பதைவிட படக்குழு சொன்னால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜனனி இது போன்று பதிலளித்து சென்றாதால் நிச்சயம் அவரை தளபதி 67 படத்தில் காணலாம் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கான ஐடி கார்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.