வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ.
இத்திரைப்படத்தை 7 ஸ்கீர்ன் ஸ்டுடியோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்ட முறையில் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அதில் நடிகை திரிஷா , மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் , அர்ஜூன் , மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் மற்றும் பலர் நடித்து வருவது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி வருகிறது.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இத்திரைப்படம் குறித்த அனைத்து அறிவிப்புகளும் வெளியான நிலையில் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் மீது அதிக ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு , தற்போது காஷ்மீர் வரை சென்றுள்ளது.
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு 150 கொண்ட குழுவுடன் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றதும் , அங்கு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதில் முதற்கட்ட தகவலாக லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மிஷ்கினின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில் சென்னை திரும்பியதாக பதிவிட்டது இணையதளங்களில் கடும் வைரலானது.
இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஜனனியும் லியோ திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இத்தகவலை பிக்பாஸ் ஜனனி மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ஜனனி அளித்த நேர்காணல் ஒன்றில் நிருபர் அவரிடம் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்கீர்களா என கேட்டத்தற்கு, தொழில் ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாது என்றார். இவர் அளித்த பதிலே கிட்டத்தட்ட இவரின் கதாபாத்திரத்தை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.