பிக்பாஸ் சீசன் 6 பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யங்களுடன் நகர்ந்து வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படையில் கடந்த வாரத்தின் இறுதியில் கமல் அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் நிச்சயம் என தெரிவித்துவிட்டு சென்றதில் இருந்து போட்டியாளர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் டபுள் எவிக்ஷனுக்கு சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டோர், அசீம், ஜனனி, கதிரவன்,ஏடிகே மற்றும் ராம் , ஆயிஷா.
இதில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரத்தின் இறுதியில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிப்புகள் வெளியாகி சுவாரஸ்யத்தை பெருக்கி வருகிறது. மேலும் நேற்றைய தினத்தில் கமல் வீட்டிலிருந்து சொன்னபடி போட்டியாளர்களுக்கு வகை வகையாக விருந்து வைத்து அசத்திவிட்டார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் கதாபாத்திரங்களாக மாறி நடித்து வருகின்றனர். இதனிடையில் இந்த வாரம் வோர்ஸ்ட் பர்ஃபாமர் என மணிகண்டன் விக்ரமனை கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விக்ரம், மணிகண்டனுடன் வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் குறித்த ப்ரோமோ மக்களிடையே கவனத்தை பெற்று வருகிறது.