பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய நாள் முதலிருந்து மக்களின் கவனத்தை நன்கு பெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6ல் இருக்கும் போட்டியாளர்கள் தங்களை சொர்க்கவாசிகளாகவும் , நரகவாசிகளாகவும் கொடுக்கப்பட்டதன் டாஸ்க்கின் அடிப்படையில் விளையாடி வருகின்றனர்.
இந்த டாஸ்க்கில் வெற்றிபெறும் நால்வருக்குதான் நாமினேஷன் ஃபிரி ஜோன் என பிக்பாஸ் தெரிவித்திருந்தது. இதனிடையில் போட்டியாளார்களுக்கு மத்தியில் நாமினேஷன் ஃபிரி ஜோனிற்காக கடுமையான போட்டிகளும் , சண்டைகளும் நிகழ்ந்து வருகிறது.
இதில் இன்றையா நாளினுடைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சொர்க்கவாசியாக இருந்த தனலட்சுமி நரகவாசியாக மாற்றப்படுகிறார். இதனை தொடர்ந்து நாமினேஷன் ஃபிரி ஜோனிற்கு செல்பவர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்தது அதில் , அமுதவாணன் மற்றும் மணிகண்டன் , ஜனனி , ஏடிகே ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
இதற்கடுத்து தனலட்சுமி தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நான் மூன்று நாள் விளையாடியதற்கு ஒரு காரணமே இல்லாமல் வெளியே வந்துட்டேன் என புலம்புகிறார். இங்க எல்லாரும் ஃப்ரண்ட்ஸ்- அஹ் தான் உள்ள அனுப்ப பாப்பாங்க என தனலட்சுமி கூறி இருக்கும் காட்சிகளும் இன்றைய ப்ரோமோவில் இடம்பெறுகிறது.