ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. இத்திரைப்படத்துக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர், காரணம் அவதார் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பண்டோரா கற்பனை உலகம் தான்.
இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி ப்ரியம் உண்டு, கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி அதனை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் , தெலுங்கு , இந்தி , கன்னடம் , மலையாளம் போன்ற உலகில் உள்ள 160 மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
இதனிடையே இத்திரைப்படம் வெளியானது முதல் இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் படையெடுத்து சென்றனர். இந்தியாவில் வெளியிடப்பட்ட அவதார் 2 பத்து நாட்களில் ரூ.300 கோடி மதிப்பில் வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர் வசூலை நோக்கி முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சினிமா வரலாற்றிலையே அதிக வசூல் செய்த திரைப்பட பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது.