நடிகர் அஜித் துணிவு திரைப்படத்துக்கு பின்னதாக, லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படம் உருவாவது உறுதியான நிலையில், இயக்குநராக விக்னேஷ் சிவன் நியமிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் திரைக்கதையில் போதிய திருப்தி இல்லை என படக்குழு விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கியது.
விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கப் போகும் ஏகே 62 குறித்து மிகப்பெரிய கனவில் இருந்து வந்த நிலையில், லைகா நிறுவனம் அவரை படத்திலிருந்து நீக்கியது அவருக்கே மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதனை தொடர்ந்து இவரின் வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனியின் கைகளுக்கு சென்றது. ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ள நிலையில் லைகா ப்ரோடக்ஷன் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் குறித்த அறிவிப்புகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில் தற்போது ஏகே 62 வின் வில்லன் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. அதில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் அருண் விஜய் மற்றும் அருள்நிதி இருவரிடமும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. ஏற்கனவே நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மகிழ்திருமேனியுடனும் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறார்.
இதன் அடிப்படையில் ஏகே 62 திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு நடிகர் அருண் விஜய் நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகத நிலையில் மக்களிடையே இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாகவே கூறலாம். தற்போது ஏகே 62 திரைப்படத்துக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், மகிழ்திருமேனி இத்திரைப்படத்தை விரைந்து முடிக்கவும் பேச்சுவார்த்தை போய் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
previous post