இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். திரைத்துறையில் தனது இசையின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார்.
இவரைப்போலவே இவரின் மகன் ஏ.ஆர்.அமீன் இசைத்துறையில் கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் பல்வேறு மொழிகளிலும் பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். இதில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாக ஓ காதல் கண்மனி திரைப்படத்திலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 திரைப்படத்திலும் பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனிடையே தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி திரைக்கு வரவிருக்கும் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனான ஏ.ஆர்.அமீனின் இசைப்பயணத்தை தொடக்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானதுல். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் பதிவிட்டிருக்கும் டிவிட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் நிகழ்ந்த பாடல் படப்பிடிப்புக்காக ஏ.ஆர்.அமீன் பங்கேற்று இருந்த நிலையில் தனக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், அவர் குறிப்பிட்டு இருப்பதாவது மேடையின் நடுவில் குழுவினரோடு நின்றுகொண்டு பாடல் பாடிக்கொண்டிருந்தோம். அவ்வப்போது பாடுவதில் எங்கள் கவனம் முழுவதுமாக இருந்த நிலையில், கிரேனில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதிலிருந்து நானும் என் குழுவினரும் நூழிலையில் உயிர்தப்பினோம், மேலும் இத்துயர சம்பவத்திலிருந்து இன்னமும் என்னால் மீண்டுவர முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அதனோடு நான் இன்று உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் ம் என் நலம் விரும்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி என பதிவிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ஏ.ஆர்.அமீனுக்கு ஆறுதல் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.