27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

கமல் என்றால் எனக்கு எப்போதும் பயம் தான் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது தயாரிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் 1947 ஆகஸ்ட் 16.

தமிழ் சினிமாவுக்கு தீனா திரைப்படத்தை முதன் முதலாக இயக்கியதன் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னதாக பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு தனக்கான ஓர் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

அதன் பின்னதாக சூர்யாவின் கஜினி, விஜய்யின் துப்பாக்கி , சர்கார், ரஜினியின் தர்பார் போன்ற திரைப்படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து ஏ.அர்.முருகதாஸ் ப்ரோடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுனம் ஒன்றையும் நடத்தி பலப் படங்களை தயாரித்து வருகிறார்.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக எங்கேயும் எப்போதும், ராஜா ராணி,மான் கராத்தே உள்ளிட்ட முக்கியத்திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தை தயாரித்துள்ளார்.இத்திரைப்படம் வருகிற 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன்படி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.முருகதாஸிடம் கமல்ஹாசனை வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்ததாவது, கமல்ஹாசன் என்றாலே எப்போதும் சிறு பயம் இருப்பதுண்டு, அதே சமயத்தில் எல்லா இயக்குநருக்கும் கமல்ஹாசனை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாகவே இருக்கும் என்றார்.

மேலும் கமல்ஹாசனை வைத்து எடுக்கப்படும் ஓர் திரைப்படம் தான் இயக்குநரின் கெரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்றார். திரைத்துறையில் சிறந்து விளங்கும் இயக்குநர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அவர்கள் எடுத்த திரைப்படத்தில் கமல் சாரை வைத்து எடுக்கப்பட்ட படமே அவர்களது கெரியரில் உயர்ந்து இருக்கும், எனவே தான் நான் சாதரணமாக ஒரு படத்தை எடுத்துவிடக் கூடாது என்ற பயத்திலேயே இருந்து வருகிறேன் என்றார்.

See also  மீண்டும் விஜய்தேவர கொண்டாவுடன் இணைந்த நடிகை சமந்தா!…

Related posts