எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் இத்திரைப்படத்துடன் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் மோத இருக்கிறது. இதற்காக ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிகத்த வண்ணம் உள்ளது.
அஜித்தின் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக Ak-62 என பெயரிட்டுள்ளனர். இதையடுத்து இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை நயன் மற்றும் த்ரிஷா என இருவர்களில் ஒருவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இருவரும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் நடிகை காஜல் அகர்வாலுடன் விக்னேஷ் ஷிவன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என சொல்லப்படும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நகைச்சுவைக்காக நடிகர் சந்தானத்தை நடிக்க வைப்பதற்கான முழு முயற்சிகளிலும் படக்குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகு என எதிர்பார்க்கப்படுகிறது.