27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

ஏகே 62-ல் இருந்து நீக்கப்பட்ட விக்கி – கணவருக்காக சிபாரிசு செய்யும் நயன்!

தமிழ்சினிமாவில் நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் தான் விக்னேஷ் சிவன், அத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களை எடுத்திருந்தார்.

இருப்பினும் இவர் நீண்ட காலமாக பல நடிகர்களிடம் கதைக்கூறி பிறகு விஜய்சேதுபதியே அனைவரிடமும் கேட்காதே நானே நடிக்கிறேன் என ஒப்புக்கொள்ள வெளிவந்த திரைப்படம் தான் நானும் ரௌடி தான். இத்திரைப்படத்தின் மூலம் நயனுடன் காதலில் விழுந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதனை தொடர்ந்து நானும் ரௌடி தான் திரைப்படமும் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

இது போன்று பல படங்களை இயக்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை நயன், சமந்தா, விஜய்சேதுபதியை வைத்து வித்தியாசமான முறையில் உருவாக்கி இருந்தார், இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு அடித்தது ஜாக்பாட், அஜித்துடன் ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்காக கதை அனைத்தும் எழுதி, அதனை லைகா நிறுவனம் தயாரிப்பதாக, அஜித் ஹீரோவாகவும் தற்காலிகமாக ஏகே 62 எனவும் பெயரிட்டிருந்தனர். இதனிடையில் படப்பிடிப்புகள் திட்டமிட்டப்படி நடக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் லைகா நிறுவனம் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயற்றிய கதை திருப்தியாக இல்லாத காரணத்தால் அவரை ஏகே 62 வில் இருந்து நீக்கிவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது, இதனிடையே விக்னேஷ் சிவனின் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு சென்றது. இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், விக்னேஷ் சிவனின் வாய்ப்பு நழுவிப்போனது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் #justiceforvigneshshivan என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர். இதற்காக நடிகை நயன் தன் கணவருக்காக லைகா நிறுவனத்துடன் சமரசம் செய்ய முயன்ற நிலையில் லைகா நிறுவனம் உறுதியாக இருந்ததை அடுத்து நயனின் எவ்வித வார்த்தைகளுக்கும் செவிசாய்க்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித்திடம் சிபாரிசு செய்ய முயன்றுள்ளார் நடிகை நயன்தாரா. ஆனால் அவ்வாய்ப்பும் கைநழுவி போனதால் குழப்பத்தில் இருந்து வருகிறாராம் நயன்.

அஜித்தை வைத்து படம் இயக்கபோகும் குஷியில் இருந்த விக்கியிடம் இருந்து வாய்ப்பு பரிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது, தற்போது இயக்குனர் விக்கி அந்த ட்வீட்டை லைக் செய்திருப்பதால் ரசிகர்கள் இவர் தான் ஏகே 62 இயக்குகிறாரா இல்லையா என குழம்பி வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை ரசிகர்கள் குழம்பிக் கொண்டு இருக்கும் சூழலே உருவாகி வருகிறது.

See also  இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நிச்சயம் இருப்பார் - படக்குழு அறிவிப்பு!

Related posts