துணிவு திரைப்படத்துக்கு பின் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக ஏகே 62 என பெயரிடப்பட்டுள்ளது.
லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை முதலில் நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் ஏகே 62 மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் திடீரென லைகா ப்ரோடக்ஷன்ஸ் விக்னேஷ் சிவனை ஏகே 62 திரைப்படத்தில் இருந்து நீக்கவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் தெரிவித்த தயாரிப்பு நிறுவனம் விக்னேஷ் சிவனின் கதை அவ்வளவு திருப்திகரமாக இல்லை எனவும் , அஜித்துக்கு ஏற்ற கதை இல்லை எனவும் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவலை வெளியிட்டது.
விக்னேஷ் சிவனை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி கைகளுக்கு ஏகே 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு சென்றது.இத்திரைப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டத்திலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே புதிதாக ஒப்பந்தமாகி இருக்கும் இயக்குனர் மகிழ்திருமேனி பல்வெறு மாற்றங்களை கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இருந்து ஏகே 62 வாய்ப்பு பறிக்கப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்ளில் #JUSTICEFORVIGNESHSHIVAN என்ற ஹேஷ்டேக் வைரலாக்கப்பட்டு வந்தது. ஆரம்ப கட்டத்தில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் தற்போது மகிழ்திருமேனி இசையமைப்பாளரை மாற்றப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி தற்போது வெளிவரும் தகவலில் ஏகே 62 திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் நீக்கப்பட்டு, சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் லைகா நிறுவனம் ஏகே 62 வில் செய்திருக்கும் புதிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி , விஜய்யின் பைராவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தவர், முதலாவதாக அஜித்தின் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர்.