இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. அஜித்தின் துணிவு திரைப்படமும் , விஜயின் வாரிசு திரைப்படமும் ஒன்றாக வெளியான நிலையில் ரசிகர்கள் நேற்று இரவு முதலே உச்சகட்ட கொண்டாடத்தில் இறங்கினர்.
அஜித்தின் துணிவு மட்டும் நள்ளிரவு 1 மணி அளவில் வெளியிடப்பட்டது. விஜயின் வாரிசு அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதில் இருவரின் ரசிகர்களும் தியேட்டர்களின் முன்பு படையெடுத்து கிட்டத்தட்ட திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து அசாம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விட கூடாது என பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தும் அவையனைத்தையும் மீறி ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து நீயா நானா என மோதிக்கொண்டனர்.
மேலும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் நள்ளிரவு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை கண்டு களிக்க ஆர்வத்துடன் இருந்த ரசிகர்கள் தியேட்டர்களில் கூச்சலிட்டு படத்தை பார்த்து முடித்தனர். அஜித்தின் துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தை கண்டு களித்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதாவது,
படம் நன்றாக இருக்கு, அஜித்துக்காக பார்க்கலாம் , குறையே இல்லை, இத்திரைப்படத்தை எதனோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர். இருப்பினும் இத்திரைப்படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்த்த பதில் இல்லாத சமயத்தில் , மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு துணிவு திரைப்படம் திருப்தியாக இல்லையா, என்ற கேள்வி எழுந்தது வருகிறது. இருப்பினும் சில ரசிகர்கள் படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.