27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

விக்னேஷ் சிவன் இயக்கும் – அஜித்தின் AK-62 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால்!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித்தின் துணிவு திரைப்படம் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் மோத உள்ளது. கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் மோதிக்கொள்ள இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

இதனிடையே அஜித்தின் துணிவு படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து படமெடுக்க இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக AK-62 என பெயரிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர், மேலும் படப்பிடிப்புகளும் சமீப நாட்களாக சென்னையில் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் AK-62 மற்றும் தளபதி 67 ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் , தற்போது சில கருத்து வேறுபாடுகள் மற்றும் த்ரிஷா பல படங்களுக்கு நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் AK-62 திரைப்படத்துக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தளபதி 67 ல் நடிப்பார் எனவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் , இறுதிகட்ட அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  ஜவான் திரைப்படத்தின் கேமியோ ரோலில் நடிக்க மறுத்த விஜய்!

Related posts