துணிவு திரைப்படத்துக்கு பின்னதாக நடிகர் அஜித் லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கும் திரைப்படம் ஏகே 62.
கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனராக விக்னேஷ் சிவன் ஒப்பந்தமான நிலையில், திடீரென விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் திருப்தி இல்லை என லைகா நிறுவனம் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 திரைப்படம் எந்த இயக்குனர் கைக்கு செல்லும் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்த நிலையில், அதன் வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு சென்றுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக தகவல் வெளியான நிலையில், அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
ஏகே 62 குறித்த அறிவிப்புகள் நாளுக்கு நாள் கசியத் தொடங்கிய நிலையில் இத்திரைப்படத்தின் அறிவிப்புகளை லைகா நிறுவனம் கூடிய விரைவில் அறிவிக்கப்படுவதாக தெரிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் ஏகே 62 திரைப்படத்தின் பூஜை வேலைகள் நடந்து முடிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தெரிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னதாக படத்தின் கதாபாத்திர தேர்வுகள் குறித்தும் , படத்தின் டைட்டீல் குறித்த தகவல்களும் வெளியிட படுவதாக தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைதலாகி வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் அதர்வா, பிக்பாஸ் கவின் , அருண் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும், இத்திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.