இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்தோடு போட்டியாக வெளிவர உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சுவாரியர் , சமுத்திரக்கனி , ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. துணிவு திரைப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட முறையில் எதிர்பார்க்கப்பட்டு வரும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்து வருகிறது. வெளியான ட்ரைலரில் நடிகர் அஜித் சற்று வித்தியாசமான முறையில் நடித்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. டிரைலரின் இறுதியில் நடிகர் அஜித் சிரித்தவாறு நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நேற்று வெளியான துணிவு படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்து வருகிறது.