சமீப நாட்களாக மையோசிட்ஸ் எனப்படும் தசை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதிப்பட்டு வருகிறார். இதனிடையே சமந்தா நடித்திருந்த யசோதா திரைப்படம் வெளியாக ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.
அவ்வப்பொழுது நடிகை சமந்தா , ஆரை குறித்து வெளிவரும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் , நல்ல நாட்களும் , மோசமான நாட்களும் என் வாழ்வில் மாறி மாறி வருகின்றன. சில நாட்களில் படுக்கையில் இருந்து எழுவதே சற்று சிரமமாக இருக்கும் , சில நாட்களில் எனக்க் இருக்கும் பிரச்சனைகளை எதிர்த்து போராட விரும்புவேன் என்றார்.
இதற்கடுத்து மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தியின்று தவித்து வருவதால் சிறிது காலம் நடிப்பதை விட்டு விட்ட ஓய்வெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். தற்பொது நடிகை சமந்தா விஜய்தெவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்துக்கான பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் சினிமாவை விட்டு சிறிது கால ம் விலகியிருப்பதாக திட்டுமிட்டு வருகிறாராம். இந்த முடிவு குறித்து சிந்தித்து வரும் நடிகை சமந்தா இதன் காரணமாக பாலிவுட்டில் ஒப்பந்தமாகி இருந்த படங்களில் இருந்து விலகி வருவதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது.