27.5 C
Tamil Nadu
28 May, 2023
CinemaCinema News

திருமணம் என்று கூட பார்க்காமல் , உருவம் கேலி செய்தனர் – நடிகை மஞ்சுமா மோகன்..!

நடிகை மஞ்சுமா மோகன் , தமிழில் நடிகர் சிம்புவுடன் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அச்சமயம் பார்த்து நடிகை மஞ்சுமாவின் உடல் எடை அதிகரிக்க அனைவரும் ஒரு கதாநாயகி இப்படியா என உருவம் கேலி செய்து வந்தனர். இருப்பினும் இதனையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத மஞ்சுமா மோகன் சமூக வலைத்தளத்தின் மூலம் அதற்கான பதிலடிகளை நாசுக்காக கூறி வந்தார்.

இதனிடையே மஞ்சுமாவும், நடிகர் கவுதம் மேனனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில் திடீரென இருவரும் காதலித்து வருவதாக தங்களின் சமூக வலைத்தள பக்கம் தெரிவித்து இருந்தார்கள்.அதனை தொடர்ந்து இருவரும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரின் திருமணமும் எளிமையான முறையில் திரைப்பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இது குறித்து மஞ்சுமா தெரிவிக்கையில் திருமணம் நடந்து கொண்டிருந்த பொழுது பலரும் எங்களை வாழ்த்தி வந்தனர். இதனிடையில் சிலர் திருமணம் என்றும் பார்க்காமல் என்னை உருவம் கேலி செய்து சிரித்தனர். எனவே நான் சமூக வலைத்தளங்களில் மட்டும் உருவக கேலியை எதிர்கொள்ளவில்லை என்னுடைய திருமணத்திலும் எதிர்கொண்டேன். இருப்பினும் அதற்கெல்லாம் கவலை இல்லை.

என்னுடைய உடல் எடையில் நான் சரியாக இருக்கிறேன், தேவை ஏற்படும்பொழுது என்னுடைய உடல் எடையை நான் குறைத்துக் கொள்வேன். தொழில் ரீதியாக எனது உடல் எடையைக் குறைக்க வேண்டிய தேவை இருந்தால் நிச்சயம் அதற்காக வேண்டி எனது உடல் எடையை குறைப்பேன் என்றுள்ளார் நடிகை மஞ்சுமா மோகன்.

Related posts