தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பையா. லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நடிகை தமன்னா உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைததிருந்தார்.
இத்திரைப்படம் வெளிவந்த காலக்கட்டத்தில் நடிகர் கார்த்திக்கு இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே தற்போது வரை வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளிவருகின்றன.
பெரும்பாலான ரசிகர்கள் பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் மக்களிடையே அதிக வரவேற்பு பெறும் ஒரு சில படங்களே இரண்டாம் பாகம் தயாரிக்கும் அளவுக்கு செல்கிறது. எப்பொழுதுமே ரசிகர்களிடையே ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எதிர்பார்ப்புகள் இருந்து வரும், அதன் படி பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது பையா 2 குறித்து வெளிவரும் தகவல்களில் இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கக உள்ளதாகவும் , கார்த்திக்கு பதில் நடிகர் ஆர்யாவும் , தமன்னாவுக்கு பதில் ஶ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளிவரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.