சினிமாத்துறையில் அம்புலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சனம்ஷெட்டி. தமிழைத் தொடர்ந்து மலையாளம் , தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது திரைப்பயணத்தை தொடங்கி வந்தார். அதனோடு சனம் ஷெட்டி மாடலாகவும் வலம் வந்தார். இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றதால் தான் பரீட்சையமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னதாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சமீபத்தில் கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை வந்தடைந்தேன்.
இருப்பினும் கோவை விமான நிலையத்தில் எனக்கு நிகழ்ந்த நிகழ்வு மிகவும் மன வருத்தத்தை உண்டாக்கியதாக பதிவிட்டிருந்தார். மேலும் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், ஏன் இவ்வளவு மத ரீதியாக பாகுபாடு காட்டுகிறார்கள். விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் தன்னையும் தன்னுடன் வந்த இரு முஸ்லீம் நபர்களை மட்டும் தனியாக சோதனைக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து எங்களின் உடைமைகளை தனியாக அழைத்து சென்று சோதனையில் ஈடுபட்டனர், இதற்கு காரணம் என்னுடைய பெயரும், என்னுடன் வந்த முஸ்லீம் நண்பர்கள் அவர்களது ஆடைகள் அணிந்தவாறு இருந்ததுமே என்றார். ஏனென்றால் எங்களுடன் அதே விமானத்தில் 190 பேர் பயணித்தனர். அவர்களிடம் இது போன்ற சோதனைகளில் ஈடுபடாமல் எங்களிடம் மட்டும் தனியாக அழைத்து சென்று சோதனையை மேற்கொண்டது மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது.இது குறித்து ஏன் எங்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு வழக்கமான சோதனை தான் என முடித்தனர்.
இவையனைத்தையும் பார்த்தவுடன் எனக்கு தோன்றிய கேள்வி என்னவென்றால், எங்களுடன் 190 பேர் விமானத்தில் பயணம் செய்தனர்.அவர்கள் யாரும் லக்கேஜ்ஜுகள் எடுத்து போகவில்லையா, இல்லை அவர்கள் ஏதும் எடுத்துவர வாய்ப்பில்லை என சோதனையை மறுத்துவிட்டனரா? சோதனையில் ஈடுப்பட்டால் அனைத்து பயணிகளுக்கும் ஒரே விதிமுறை தான் அனைவரையும் சோதித்தாக வேண்டும், எங்களை மட்டும் மத ரீதியாக பாகுபாடுகள் காட்டி சோதனை செய்தது என்னை காயப்படுத்தியது. முதலில் இதுபோன்ற மத ரீதியின் அடிப்படையில் செயல்படும் சம்பவங்களை நிறுத்த வேண்டும்,இவையெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் என காட்டமாக பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.