வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் வாத்தி. இத்திரைப்படம் வரும் 17 தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, மொட்ட ராஜேந்திரன் , சாய் , நரேன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வாத்தி பட புரோமோஷன் நிகழ்வில், நடிகை சம்யுக்தா பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். பெயருக்கு பின்னால் சாதி என்னும் அடையாளத்தை, பயன்படுத்துவது ஏன் என கேட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பேசிய அவர், நாம் பிறக்கும் பொழுதே பெயருக்கு பின்னால் சாதி என்ற அடையாளத்தை சேர்த்து விடுகின்றனர். அதனை எளிதில் என்னால் நீக்க முடியவில்லை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறது தற்போது தான் நீக்கியிருக்கிறேன். இப்போது தான் எனது பெயர் சரியாக இருக்கிறது என தோன்றுகிறது.
தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசைகளில் ஒன்று , ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, வாத்தி திரைப்படத்தில் டப்பிங் கொடுக்க வேண்டும் என எண்ணினேன் சில பல விஷயங்களால் தர முடியாமல் போய்விட்டது. நடிப்பதற்கான ஆர்வம் இருந்தும் இரு வருடங்களாக வாய்ப்புகளை இழந்து நின்றேன். ஆனால் வாத்தி திரைப்படம் அதெர்தெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளது. எனது கெரியரில் மிகவும் முக்கியமான படம் வாத்தி.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், சினிமாவுக்குள் நுழைந்தேன் , ஒரு டிகிரி முடிக்கவில்லையே என்ற கவலை எனக்கு இதுவரை இருந்ததில்லை. காரணம் டிகிரி முடித்தால் தான் கெரியரில் ஏதாவது சாதிக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை, இதைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயங்கள் வேண்டாம் எனக் கூறினார்.
இதனிடையே பத்திரிக்கையாளர் தரப்பிலிருந்து மலையாள நடிகைகளின் பெயருக்கு பின்னால், சம்யுக்தா ஹெக்டே, சம்யுக்தா ரெட்டி போன்ற பல பெயர்கள் இருக்கிறது, நீங்கள் ஏன் பெயருக்கு பின்னால் அடையாளம் வைக்கவில்லை என்ற கேள்விக்கு, எனது பெயருக்கு பின்னால் இன்னொரு பெயர்இல்லாதது தான் சரியானதாக உள்ளது, இதனை தொடர்ந்து என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதுமானது எனக் கூறிச்சென்றது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறத.
previous post