தசைநோயால் பாதிக்கப்பட்ட சமந்த நீண்ட சிகிச்சைக்கு பின்னதாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த யஷோதா திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது சரித்திர கதையம்சத்தின் அடிப்படையில் இத்திரைப்படத்தை குணசேகர் இயக்கியிருக்கிறார். மேலும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருக்கிறார்.
இத்திரைப்படம் தமிழ் , தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இதையடுத்து சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதுமட்டுமல்லாது சமந்தாவை திரையில் காண அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே படத்தின் வெளியீட்டு தேதி பிப்ரவரி 17 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். ரசிகர்களுக்கு இத்தகவல் சற்று அதிர்ச்சியை அளித்தாலும் படக்குழு ஓரிரு நாட்களில் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக தெரியப்படுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில் படக்குழு அதிகாரபூர்வமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சாகுந்தலம் திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்து வருகின்றனர்.