தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே.
மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்த நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார், இருப்பினும் இந்த வகையான நோய் முழுவதும் சரிய சில காலம் எடுத்துக்கொள்ளும் எனவும் தகவல் வெளியானது.
சமந்தா மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்களும் திரைத்துறையினரும் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகினர், சிகிச்சை எடுத்து வந்த சமந்தா சமீபத்தில் படப்பிடிப்புகள் அனைத்தில் இருந்தும் விலகி இருந்தார்.இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான யஷோதா திரைப்படத்திற்காக நேர்காணல் ஒன்றையும் கொடுத்திருந்தார். அவ்வப்பொழுது பேசிய சமந்த கடினமான சூழ்நிலையில் தான் இருக்கிறேன் ஆனால் நிச்சயம் குணமடைவேன் என தெரிவித்திருந்தார்.
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையில் , அவர் கையெழுத்திட்ட அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற வெப் சிரிஸில் நடிப்பதற்காக சமந்தா ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அதன் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.படப்பிடிப்புகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டதால் சமந்தா சினிமாவை விட்டு விலகி விட்டதா வீன் வதந்திகள் பரவி வந்தன. இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது சீட்டாடல் இந்தியா வெப் தொடரின் படப்பிடிப்புகளில் சமந்தா ஆர்வம் காட்டி நடித்து வருவதாக படக்குழுவினர் தரப்பில் இருந்தும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.