27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

நண்பரோடு வெளியே போனால் என்ன தவறு – பிரபல நடிகை ஆவேசம்!

தமிழில் சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரபலமானார்.

சமீப நாட்களாகவே நடிகை ராஷ்மிகா மந்தனா அதிகளவில் சர்ச்சைக்கு ஆளாகி வருகிறார். இதில் கன்னட திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தரப்படாது என ராஷ்மிகாவுக்கு கன்னட திரையுலகம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சமீப காலமாகவே நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்திவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்து வைரலாகி வந்தது.

இதனிடையே நடிகை ராஷ்மிகா தன்மீது வீன் வதந்திகள் வருவது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் நான் செய்யாதது பற்றி தான் அதிகம் பகிர்கிறார்கள், ஏன் என் மீது இதுபோன்று தவறான கருத்துக்களை அடுக்குகிறார்கள் என் மீது அவர்களுக்கு ஏதேனும் கோபமா என்ன என்று தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் இது போன்று செய்வதால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் என்றிருந்தார்.

See also  மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி - இன்றுடன் அவகாசம் நிறைவு?

என் மீது பல தவறான கருத்துக்கள் எழுந்து வருவதால் நான் அமைதியாக இருந்தாலும் திமிரு பிடித்தவள் என்கின்றனர். வாழ்க்கையில் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. எனவே எவ்வகையான வதந்திகளுக்கும் நான் வருத்தப்படப் போவதாக இல்லை என்றார். ஆனால் ஒரு எல்லை வரை காத்திருப்பேன் அதை தாண்டி எவரேனும் நடந்துகொண்டால் நிச்சயம் பதிலடி கொடுப்பேன் என தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து பேசிய அவர் விஜய் தேவராகொண்டாவுடன் காதலில் இருக்கிறீர்களாமே, அவரோடு மா சென்றீர்களா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். அவர் என் நண்பர் , நண்பரோடு வெளியில் போனால் தவறு இருக்கிறதா என்ன என்றார். ராஷ்மிகா மீது தொடர்ந்து எழுந்து வரும் அவதூறுகளுக்கு மத்தியில் இதுபோன்று ஆவேசமாக பேசியிருப்பது வைரலாக்கப்பட்டு வருகிறது.

Related posts