தமிழ் திரையுலகில் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர். ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்பு சின்னத்திரை நாடங்களில் நடித்து, மக்களின் மத்தியில் பிரபலமான பின்பு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
ஆரம்பத்தில் சிறிய கதாநாயகர்களோடு நடித்து வந்த பிரியா பவானிசங்கர், தனுஷ், அருண்விஜய், எஸ்ஜே சூர்யா , கார்த்தி உள்ளிட்ட நடிகர்களோடு பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பு பெற்றார். இதையடுத்து தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் நடிகை பிரியா பவானிசங்கர் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதார்த்தமான வாழ்க்கையை படமாக்கும் கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், அதற்கான முக்கியத்துவம் என்னிடம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆரம்பத்தில் நான் சினிமாவுக்கு வரும் பொழுது ரசிகர்கள் என்னை ஏற்றுகொள்வார்களா, மாட்டார்களா என்பதை பற்றிய கவலை எல்லாம் எனக்கில்லை.
நடித்தால் பணம் வருகிறதா? அதற்காகவே நடித்தேன் என்றார்.இதையடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் , அக்கதை வேலைக்கு போகாத கணவன் மற்றும் வேலைக்கு செல்லும் மனைவிக்கு இடையே நடக்கும் சம்பவங்கள் குறித்து அமையும் என்றார். இதைத் தொடர்ந்து மேலும் பேசிய அவர், சினிமா பின்னணியில் இருப்போர்களே தங்களை நிரூபித்துக்கொள்ள நிறைய கஷ்டப்படுகிறார்கள், இதை பார்க்கும் பொழுது நான் அதிகமாகவே கஷ்டப்பட வேண்டும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.