27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

சாலையோர மக்களுக்கு உதவி செய்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்!!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் தற்போது பல மொழிப் படங்களில் நடிப்பதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கனெக்ட் திரைப்படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

விக்னேஷ் சிவனும் – நயன்தாராவும் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையிலும் நடிகை நயன்தாரா அனைத்தையும் சமாளித்து வந்தார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு புத்தாண்டை தனது கணவன் மற்றும் இரு குழந்தைகளோடு கொண்டாடினார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் குழந்தைகளோடு புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று எழும்பூர் ரயில் நிலையத்தின் அருகே சாலையோர மக்களை சந்தித்து புத்தாண்டு பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் வைரலாகி வருகிறது.

See also  ரன்வீரின் கைப்பிடிக்க மறுத்த தீபிகா படுகோன் - வீடியோ வைரல்!..

Related posts