தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் மிகவும் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னதாக நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனிடையே தற்போது குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக நடிகை நயன் சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமாவில் இருந்து பல சர்ச்சைகளில் சிக்கி பாதியில் சினிமாவை விட்டு ஒரு காலத்தில் விலகி இருந்தவர் தான் நயன்தாரா. இதையடுத்து மீண்டும் சினிமாவுக்கு ரீஎண்ட்ரி கொடுத்து பல முக்கிய படங்களில் , முன்னணி நடிகர்களோடு நடித்து வந்து, தனது பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுமளவிற்கு சினிமாவில் கடுமையாக உழைத்து தன்னை தக்க வைத்துக்கொண்டவர்.
இதனை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களையும் எடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் வெளியான அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கனெக்ட் திரைப்படம் வரையும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை நயன் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நடிகை நயன் ஜெயம் ரவியோடு இறைவன் திரைப்படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இரண்டு படங்கள் தனது கைவத்திலும் வைத்திருக்கிறார் நயன்தாரா. இத்திரைப்படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலக நயன் விலக இருப்பதாகவும், அதன் பின் தனது கணவரோடு திரைப்படங்களை தயாரிக்கும் பணிகளில் மட்டும் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் நயன் தரப்பில் இருந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது 15 ஆண்டுகளாக நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்து வருவதும் குறிபிடத்தக்கது.
previous post