தமிழில் அன்வர், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, எனிமி, தடையற தாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.
இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வருகிறார். மலையாளத்தில் இவர் நடித்திருந்த ஜன கண மன திரைப்படம் மக்களிடையே நல்ல வரவற்பை பெற்றது. இதற்கு முன்னதாக நடிகை மம்தா மோகன்தாஸ் , புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னதாக பழைய நிலைக்கு திரும்பிய மம்தா மீண்டும் ஒரு நோயால் அவதிப்பட்டு வருவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் அவரது சமூக வலைத்தள பக்கத்தில், சருமம் சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சருமத்தில் மச்சங்கள் உண்டாகும் எனவும், இதையடுத்து உடலின் நிறங்கள் மாறிவிடும் எனவும், நாளாக நாளாக மச்சங்களின் அளவு பெரிதாகி கொண்டே போகும்.
மேலும் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் மம்தா மோகன்தாஸ் சூரிய பகவானுக்கு வேண்டுகோள் விடுத்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரியமான சூரிய பகவானே , என் சருமம் வண்ணத்தை இழந்து வருகிறது. எனவே நான் உன் முன் வந்துள்ளேன், நீ வருகை தருவதற்கு முன்னதாகவே நான் எழுந்து உன் வருகையையும் , சூரிய ஒளியையும் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன், உன் சக்தியை எனக்கு கொடு, நான் உனக்கு கட்டுப்பட்டு இருப்பேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.