தமிழ் சினிமாவில் முதன் முதலில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.இதற்கடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழிப்படங்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து நடிகைகளின் பிரபலமான பட்டியலில் கீர்த்தி சுரேஷும் இடம்பெற்றுள்ளார்.ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்த கீர்த்தி சுரேஷ் அதன் பின் விஜய், சூர்யா மற்றும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடம் நடித்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றார்.
நடிப்பில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர். தற்போது சைரன் ,மாமன்னன் , ரகுதாதா , ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட திரைப்பட படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ், இவரது நடிப்பில் நான் ஈ உடன் தசரா திரைப்படம் திரைக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது, இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் ஒருவருடன் காதலில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கு முன் கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது, அதற்கடுத்து இருவரும் நண்பர்கள் தான் என விளக்கம் கொடுத்தனர், இதனை தொடர்ந்து காமெடி நடிகர் சதீஷை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துவிட்டதாகவும் , இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனை தொடர்ந்து விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ் அது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறியிருந்தார்.
இது போன்ற வதந்திகளில் சிக்கிக்கொள்ளும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் , அவர் தனது பள்ளிக் காலத்து நண்பரை காதலித்து வருவதாகவும் , இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் , மேலும் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.இது குறித்து எவ்வித பதிலும் கீர்த்தி சுரேஷ் தெரிவிக்காத நிலையில் தற்போது அவரது தாயார் மேனகா சுரேஷ் இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் , வீனாக வதந்திகளை பரப்புகின்றனர், இது குறித்து விரிவாக பேசுவதற்கு எல்லாம் ஒன்றுமே இல்லை என கூறியுள்ளார்.