26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

விஜய்யின் லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பகட்டத்தில் சென்னையில் தொடங்கி தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயார் செய்து வருகிறது. மேலும் லியோ திரைப்படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து , நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் த்ரிஷா. இவர்களின் காம்போவை காண ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் இத்திரைப்படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன் , அர்ஜூன் , மிஷ்கின் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய்யின் கூட்டணி மீண்டும் லியோவில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் ஆரவார எதிபார்ப்பு கொடுத்து காத்து வருகின்றனர்.

லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி வந்தது. சமீபத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் , லோகேஷ் கனகராஜ் சற்று வித்தியாசமாக சிந்திக்க கூடிய ஒரு நபர், இதுவரை அவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே பார்த்துள்ளேன், இன்று அவர் இயக்கும் படத்தில் நான் நடிப்பது என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று தான் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், மக்கள் எனக்கு கொடுத்த பட்டம் அக்‌ஷன் கிங், என்னை வேறு விதத்தில் மக்களிடம் காட்டப் போகிறார் என கூறியிருந்தது மக்களிடையே கவனத்தை பெற்று வந்தது.

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யோடு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் அதிர்வலையாக மாறியது. இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்த நடிகை அபிராமி வெங்கடாசலமும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனநர் லோகேஷ் கனகராஜோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அபிராமி.இதனிடையே இவரும் லியோ திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் பின் பிரபலமான இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் , நடிகர் மாதவனின் நடிப்பில் வெளியான தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

See also  த்ரிஷாவை நக்கலடித்த கார்த்தியின் டிவிட்டர் பதிவு வைரல்!...

Related posts