27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

காதலனுடன் பிக்பாஸ் ஆயிஷா; விரைவில் திருமணம்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் வைரலானவர் தான் ஆயிஷா.

இவர் ஒரு சீரியல் நடிகையும் ஆவார், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரபலமான தொடர் சத்யாவின் நாயகியாகவும் வலம் வந்தவர்.இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு முன்னதாகவே நடிகை ஆயிஷா காதலில் விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீப நாட்களுக்கு முன்னதாக தன் காதலனுக்கு ப்ரோபோஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டு முகத்தை மட்டும் மறைத்து , கமிட்டட் என்பதனை உறுதி செய்திருந்தார்.

இதையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று, ஆயிஷா தன் காதலனோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் திகைக்க வைத்தார்.ஆயிஷா காதலிக்கும் நபரின் பெயர் யோகேஷ் , இவர்கள் இருவரும் சிரித்தப்படி மகிழ்ச்சியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனிடையே யோகேஷ் மற்றும் ஆயிஷா இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆயிஷா மற்றும் யோகேஷ் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் , பகிர்ந்தும் வருகின்றனர்.

இதனை தொடர்ந்து காதலர் தினத்தன்று ஆயிஷா தனது காதலனை அறிமுகம் செய்து வைத்த் நிலையில் , இவர்களது திருமணம் குறித்த தகவல்களும் கூடிய் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  வெற்றிகரமாக போடப்பட்டது ஏகே 62 வின் பூஜை!..

Related posts