27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

விடுதலை படத்தில் நடித்தது குறித்து பாவனி ஸ்ரீ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!..

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் நிலையில், இதில் நடிகர் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி மக்களிடையே அதீத வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை பாவனி ஸ்ரீ இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் அனுபவம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் இத்திரைப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில் “பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அதேசமயத்தில் அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடந்தபோதும் அங்கிருக்கும் ஒரு செடி, பூச்சி கூட தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொள்ள பல ஏற்பாடுகளை செய்து வந்தார்.

See also  ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!..

மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரையில் ஓர் நகைச்சுவை நடிகனாக வலம் வந்த சூரி இத்திரைப்படத்தில் தீவிரமான முறையில் மிகவும் வித்தியாசமாகவே நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் இருண்ட காடுகளுக்குள் தான் நடந்தது அவை எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது என்றார். இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டு பாகங்களையும் இருப்பதாக தெரியப்படுத்தினார், மேலும் இசைஞானி இளையராஜா இசையில் பணியாற்றியது எனக்கு பெரிய ஓர் ஆனந்தத்தை கொடுக்கிறது.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், விடுதலை திரைப்படத்தை இன்னமும் நான் முழுதாக பார்க்கவில்லை, இருப்பினும் படத்தை பார்த்த பலரும் விடுதலை திரைப்படம் நன்றாக வந்துள்ளதாக மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பு பெறும், அதே போலவே தான் விடுதலை திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்றுள்ளார்.

See also  பிக்பாஸ் சீசன் 6 : உஷாரான அமுதவாணன் - மைனாவுக்கு இவ்வளவு தான் சம்பளமா?

Related posts