தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனை தொடர்ந்து அங்காடித்தெரு , எங்கேயும் எப்போதும் , தூங்கா நகரம் , வத்திக்குச்சி போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் தென்பட்டு வந்தார்.
நடிகை அஞ்சலி எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இருவரும் காதலித்து வந்ததாக சமூக வலைத்தளங்ளில் வைரலாகத் தொடங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்யும் வகையில் தான் புகைப்படங்களையும் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்தனர்.
இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக்கொண்டனர். அதன் பின் நடிகை அஞ்சலி நடிப்பதில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை அஞ்சலி தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து முன்னணி பட்டியலில் இருந்து வருகிறார். தற்போது அஞ்சலி அவர் வாழ்க்கையில் நடந்து முடிந்த ஒரு சில நிகழ்வுகளை ஊடகங்களுடன் பகிருந்திருக்கிறார்.
அதில் ஒரு நபருடன் நான் வைத்திருந்த ரிலேஷன் ஷிப் மூலம் கெரியரையே கவனிக்க முடியாமல் தவறவிட்டேன். மேலும் அந்த உறவு தவறானது, எனது கெரியருக்கு தடையாக இருந்ததால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஒரு காலக்கட்டத்தில் நிறுத்தி விட்டேன் எனக் கூறியிருக்கிறார். இந்நிலையில் அந்நபரின் பெயரை குறிப்பிடுவதற்கும் மறுத்து இருக்கிறார். தற்போது நடிகை அஞ்சலி ராம் சரன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
previous post