தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால், தன் குடும்பத்தினரோடு கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
ஆனால் அக்கோவிலில் இந்துக்களை தவிர வேறு மதத்தினருக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகவும், வழக்கமாகவும் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட இந்த கோவிலின் நடையை முன்னிட்டு நடிகை அமலாபால் தன் குடும்பத்தினரோடு கடவுளை வழிபட கேரளா சென்றுள்ளார். இருப்பினும் நடிகை அமலாபால் வேற்று மதத்தினரை சார்ந்தோர் என்பதால் அவரை கோவிலுக்குள் நுழைய கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
கோவில் உள்ளே அவரை அனுமதிக்காத காரணத்தால், வேறு வழியின்றி அமலாபால் கோவிலின் வெளியே நின்று தன் குடும்பத்தினரோடு கடவுளை வணங்கி சென்றார். இதையடுத்து அமலாபால் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவு செய்தார், அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆவலோடு வந்தேன், கோவிலுக்கு உள் நுழைந்து சாமியை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனவே கோவிலுக்கு வெளியில் நின்று நான் கடவுளை வழிப்பட்டேன், இந்த 2023 ஆம் வருடத்திலும் மதபாகுபாடுகள் காட்டுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது போன்ற நிலைகள் விரைவில் மாறும் என நம்புகிறேன்.மக்களை மதத்தின் அடிப்படையில் பார்க்காமல் மனிதர்களாக பார்க்கும் காலம் விரைவில் வரும் என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கோவில் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது, வேற்று மதத்தினரை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது நடைமுறை, இதனை நடிகை அமலாபால் என்பதற்காக எல்லாம் மாற்றிக்கொண்டு அவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது, இது போன்று வேற்று மதத்தினர் நிறைய பேர் கோவிலுக்கு வந்து ஏமாற்றமடைந்து செல்கின்றனர், அவையெல்லாம் வெளியில் தெரிவதில்லை, இவர் நடிகை என்பதால், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காதது குறித்து சர்ச்சையாக மாறி வருகிறது என்றனர்.