தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் வலம் வரும ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது, இருப்பினும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் நடிகை ஐஸ்வர்யா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது.
மேலும் இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் செய்தித் தொடர்பாளரான யுவராஜ் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு ஒன்றில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது, மேலும் இவ்விவகாரம் கூடிய விரைவில் சரிசெய்ய்யப்பட்டு அவரது ட்விட்டர் கணக்கு மீட்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நடிகை ஐஸ்வர்யாவின் ட்விட்டர் கணக்கு சரிசெய்யப்படும் வரை சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துக்களை ரசிகர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக் கோண்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் செய்தி தொடர்பாளார் யுவராஜ், டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க்கை டேக் செய்து அன்புள்ள எலான் மஸ்க், நான் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அதிகளவு ரசிகர்களை உடைய தென்னிந்திய நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் விளம்பரத்தாரார். இதனைத் தொடர்ந்து அவர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது, இது குறித்து உங்களின் கவனம் ஈர்க்க விரும்புவதாகவும், கூடிய விரைவில் உங்கள் குழுவின் உடனடி உதவியுடன் ட்விட்டர் கணக்கை மீட்க உதவுமாறும் கோரிக்கை வைத்திருக்கிறார்.