27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema News

வாரிசு திரைப்பட ஆடியோ லான்ச் – ரசிகர்களுடன் எடுத்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட விஜய்!!



இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு. இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய நட்சித்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர்.

வரும் பொங்கலுக்கு நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்திற்கு போட்டியாக விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது. இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்து காத்து வருகின்றனர். இதனிடையே வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்த நிலையில் , நேற்று பிரம்மாண்டமான முறையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்தது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்தது தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ரசிகர்கள் படையெடுத்து திரண்டனர். இதில் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அரங்கில் காலை முதலே குவியத்தொடங்கினர். இந்நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வருகைத்தந்துள்ளனர். மேலும் வாரிசு இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இம்முறை என்ன குட்டி ஸ்டோரி சொல்லப்போகிறார் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

இதனிடையே மேடை ஏறிய நடிகர் விஜய் தனது செல்போன் மூலம் , ரசிகர்களுடன் செல்ஃபி முறையில் வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார். மேலும் அதனை தனது சமூக வலைத்தள பக்கமான டீவிட்டரில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட வீடியோவும் , அவரின் டிவிட்டர் பதிவும் நேற்றிரவு முதல் கடும் வைரலாகி வருகிறது.

See also  அஜித்தின் துணிவு திரைப்படத்தை மிஞ்சியது வாரிசு - இணையத்தை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Related posts