இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்திருந்த திரைப்படம் ஜெய்பீம். இத்திரைப்படம் கடந்த வருடம் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் இத்திரைப்படத்தில் சூர்யா , லிஜோ மோள் மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜெய் பீம் திரைப்படம் முழுக்க முழுக்க ஓர் உண்மை சம்பவத்தின் கதையம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
உண்மை கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் , ஜெய் பீம் திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. மேலும் படத்தின் மீது பல வழக்குகளும் போடப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வரவேற்றனர். இத்திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், ஜெய்பீம் ஒரு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு பல விருதுகளை தட்டி சென்றது.
இதினிடையே தற்போது கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் குழுவினர் கலந்து கொண்டு தன்கள் அனுபவம் குறித்து பேசியிருந்தனர். அவ்வப்போது பேசிய இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா இத்திரைப்படத்தை தயாரித்ததுடன் நிறுத்திக்கொள்ளாமல் சந்துரு கதாபாத்திரத்தையும் நானே முடித்து தருவதாக கூறி ஒவ்வொரு செலவுகளையும் ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து பேசிய அவர், இரண்டாம் பாகங்களாக பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கையில், ஜெய் பீம் இரண்டாம் பாகம் வெளிவருமா என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர் இதற்கு பதிலளிக்கும் பொருட்டு இயக்குனர் ஞானவேல் வழக்கறிஞர் சந்துரு ஜெய்பீம் போன்ற பல வழக்குகளை நடத்தியிருக்கிறார். அதில் ஏதேனும் ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு அதனை மையமாக வைத்து ஜெய்பீம் 2 ஆம் பாகம் நிச்சயம் படமாக்கப்படும், அதில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறியிருப்பது ரசிகர்களை உற்சாகமடையச் செய்து வருகிறது.