சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நெல்சன் இயக்கி வரும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இதனிடையே நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இயக்குனர் நெல்சனும் விஜய்யை வைத்தி இயக்கி இருந்த பிஸ்ட் படமும் வெளியாகி இருந்த்து. பீஸ்ட் படத்தின் மீது ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் இருந்த சமயத்தில் பீஸ்ட் படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. எனவே இதன் அடிப்படையில் நடிகர் ரஜினி நெல்சனுடன் கைக்கோர்க்க மாட்டார் என பல தரப்புகளில் இருந்து பல்வேறு கேள்விகள் எழத்தொடங்கியது.
இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ரஜினி நெல்சனுடன் அடுத்தப்படம் பண்ணப்போவதாக அறிவித்திருந்தார். இதனிடையெ ஜெய்லர் படப்பிடிப்புகள் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை நெல்சன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருவதாக தகவல் வெளியானது.
ஜெய்லர் திரைப்படத்துக்கு பின்னதாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் படம் எடுப்பதாக தகவல்கள் வெளியானது. இதில் ரஜினிக்கு சிபி சக்கரவர்த்தி கூறிய திரைக்கதையில் திருப்தி இல்லாததால் சிபி சக்கரவர்த்தியுடன் இணையும் முடிவை நிறுத்தி வைத்தார்.
இதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் அடுத்த படத்திற்கு இயக்குனராக களமிறங்க இருக்கும் நபரின் பட்டியலில் கோமாளி மற்றும் லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் பரிசீலனையில் இருந்து வருவதாக தகவல் வெளிவந்ததை தொடர்ந்து இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.