உலகின் 50 சிறந்த நடிகர்களின் பட்டியலில் ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற வாக்குகளின் அடிப்படையில், நடிகர் ஷாருக்கான் ஒரே இந்திய நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுபோன்று சிறந்த நடிகர்களின் பட்டியலில் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த ரசிகர்கள் ஷாருக்கானுக்கு பெரிய கவுரவம் கிடைத்ததாக உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இவரது நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே என்ற காதல் திரைப்படம், ஷாருக்கானுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்து ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ஷாருக்கான் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான, அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தீபிகா படுகோனேவுடன் பதான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் பதான் , அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தின் பாடல்கள் , போஸ்டர்கள் என வெளியாகி ரசிகர்கள் ஒரு பக்கம் உற்சாகத்தில் இருந்து வந்தாலும், சிலர் படத்தை தடை செய்யக்கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
previous post