தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் நடிப்பில் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு , இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. வாரிசு திரைப்படத்தில் குஷ்பு , சரத்குமார், பிரகாஷ் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தை சார்ந்தே இருக்கக்கூடும். இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிகவும் ஈர்த்து வந்தது.
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் முழுவதும் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்விரண்டு திரைப்படங்களும் வரும் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒன்றாக மோத இருக்கின்றனர். இவர்கள் இருவரது ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இதில் துணிவு திரைப்படத்தின் முதற்காட்சி நள்ளிரவு 1 மணியளவிலும் , வாரிசு திரைப்படத்தின் முதற்காட்சி அதிகாலை 4 மணியளவிலும் திரையிடப்பட உள்ளது . இதற்காக நெற்று முதல் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி சில நிமிடங்களில் விற்றும் தீர்ந்துள்ளது.
இதனிடையே நடிகர் பிரபு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று அரும் காதர்பாஷா முத்துராமலிங்கம் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் இர்க்கும் பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவ்வப்பொழுது அவர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு இரண்டுமே நன்றாக தான் ஓடும். இருவருமே எனது தம்பிகள் தான் இருவரின் படங்களும் வெற்றி பெற்றால் சந்தோஷம் என்றார்.