நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி, படப்பிடிப்பு மற்றும் கட்சி வேலைகள் என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் நபர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒன்று. இவருக்கு வயது 68, இருப்பினும் இவரின் செயல்களை ரசிப்பதற்கு, கொண்டாடி மகிழ்வதற்கும் உலகநாயகனுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் , லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. தற்போது ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் ஹைதராபாத் சென்று ,இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்துவிட்டு வந்தார். அதனை தொடர்ந்து நடிகர் கமலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதனை தொடர்ந்து நடிகர் கமல், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவ்வப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். உடல்நலம் குறித்த கேள்விக்கு கமல் , முன்பெல்லாம் பெரிய விபத்து நேர்ந்தாலும், அடுத்த படத்தின் ஷூட்டிங் எப்பொழுது என தான் கேட்பார்கள், இப்போதெல்லாம் சின்ன இருமல் என்றாலும் , என்னைப் பற்றிய பெரிய செய்திகளாக தான் வெளிவருகிறது. அதற்கு காரணம் ஊடகமும் , இவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு, பெருகிவருகிறது என நான் நம்புகிறேன். நான் நன்றாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.