லத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா , சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனியை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மோழிகளில் திரையிட உள்ளனர்.
இதில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரீத்து வர்மா நடித்து வருகிறார், மேலும் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தது படக்குழு.
விஷாலின் நடிப்பில் வெளிவந்த லத்தி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரும்பான்மையாக திருப்தி படுத்தாத நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் அமையுமா என்பது பலரது கேள்வியாக இருந்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படக்குழு அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீப நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு காட்சியாக லாரி காட்சி ஒன்று படமாக்கப்பட்ட நிலையில், லாரி நிலைத்தடுமாறி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் சென்று செட்டில் மோதியதில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த 100 க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கும் , தொழிலாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது.
previous post