துணிவு திரைப்படத்துக்கு பின்னதாக நடிகர் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படம் ஏகே 62 என்பது அனைவரும் அறிந்ததே.
இத்திரைப்படத்தை முதலில் இயக்குநரும் , நயனின் கணவருமான விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் திரைக்கதை திருப்தியாக இல்லையென லைகா நிறுவனம் அவரை ஏகே 62 திரைப்படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியது.
இதனை தொடர்ந்து விக்னேஷ் ஷிவனின் வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு சென்றது. இதன் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது.அஜித்தின் திரைப்படம் கைவிட்டு போனதில் இருந்து இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவனே இயக்குவதற்கு பல முறைகளில் முயற்சி செய்தார். இந்நிலையில் நடிகை நயனும் தன் கணவருக்காக பலரிடம் பேசி பார்த்தும் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவது என்பது முடியாமல் போனது.
இந்நிலையில் அஜித்தை வைத்து இயக்க முடியாமல் போன திரைப்படத்தில் அடுத்து யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழத் தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் நானும் ரௌடி தான் திரைப்படத்தின் கதையை முதலில் விஜய் சேதுபதியிடம் கூறிய பின்பு பல நடிகர்களிடம் கூறியுள்ளார் விக்னேஷ் ஷிவன். பல நடிகர்களிடம் கதைகள் கூறியும் நடிக்க முன்வராததால் , நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் அழைத்து நானே நடித்து தருவதாக கூறி அத்திரைப்படத்தை முடித்தனர், இதனிடையே நானும் ரௌடி தான் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இயக்குனர் விக்னேஷ் சிவனும் முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் வலம் வர ஆரம்பித்தார்.
அத்திரைப்படத்துக்கு பின்னதாக இயக்குனர் விக்னேஷ் ஷிவனும் , விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.தற்போது அஜித்தின் திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டத்தை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் தாமாக முன் சென்று திரைப்படத்தில் நடிப்பதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளது.
இதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதிக்கு கதை கூறியிருப்பதாகவும் , விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அஜித்தின் ஏகே 62 படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து ஏமாற்றத்தை சந்தித்த விக்னேஷ் சிவன் , விஜய் சேதுபதி கைக்கொடுத்துள்ளதால் சற்று மகிழ்ச்சியில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
next post