தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய், திரைத்துறையில் இதுவரை 60 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது லியோ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவை பொறுத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து தளபதி விஜய் என்ற பெயர் தான் அதிகம் ஒலித்து வருகிறது. நடிகர் விஜய்க்கு எண்ணற்ற ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பொதுவாகவே விஜய் என்றால் ஓர் காலக்கட்டத்தில் அமைதி என்றே பொருளாக இருந்தது, அதிகம் பேசமாட்டார், தான் உண்டு தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு என்று தான் நாட்களை கடத்தி வந்தார். இதனிடையே சமீப காலமாக இவர் நடிக்கும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் தத்தளிக்க செய்து வருகிறார்.
இவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும் கடைசி நிமிடங்களுக்காக அரங்கமே காத்திருக்கும், சமீப காலமாக நடிகர் விஜய் ரசிகர்களுடன் அதிக தொடர்பில் இருந்து வருகிறார். பெரும்பாலான நடிகர்கள் சமூக வலைத்தளப் பங்கங்களை வைத்திருப்பதுண்டு. அதாவது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளப்பக்கங்கள் , ஆனால் இன்ஸ்டகிராம் பக்கம் வைத்திருப்போரின் நடிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கதே.
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது, சமூக வலைத்தளத்தையே அதிர வைத்தது, ஏற்கனவே ட்விட்டர், ஃபேஸ்புக் என இரு சமூக வலைத்தளப்பக்கத்தில் இருக்கும் விஜய் தற்போது இன்ஸ்கிராமிலும் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது தனது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டகிராம் கணக்கை @actorvijay என்ற பெயரில் தொடங்கியிருக்கிறார். மேலும் இந்த கணக்கை ரசிகர்கள் ஏராளமானோர் பின்தொடர்ந்து இன்ஸ்டகிராமையே திக்குமுக்காட செய்து வருகின்றனர். மேலும் நொடிக்கு நொடிக்கு ஃபாலோவர்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய அரை மணி நேரத்திலேயே லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் பின் தொடர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.