தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.
நடிகர் வடிவேலு சில பல பிரச்சனைகள் காரணமாக நடிப்பதை நிறுத்தி, சினிமாவை விட்டு விலகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் மட்டும் வடிவேலு மீண்டும் நடிப்பதற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னதாக நடிகர் வடிவேலு நடிப்பின் பக்கம் திரும்பினார். இவர் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி சினிமாவுக்கு வந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்து வந்தனர்.இந்நிலையில் நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பின்னதாக வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் திரையரங்களுக்கு படையெடுத்தனர், இருப்பினும் அத்திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்தாமல் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெளியான சந்திரமுகியின் முதல் பாகத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தான் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவை ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில், இயங்கி வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது, இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.