தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான உதயநிதி நடிப்பில் தற்போது கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகயுள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் உதயநிதி , மேலும் இத்திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் என பலரும் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரைப்படங்களின் கதைகள் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும், தனது பெயருக்கு பின்னால் ஆரசியல் வட்டாரமே இருந்து வரும் நிலையில், இவர் முதன்முதலாக சினிமா மூலம் தான் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது இவர் முதன் முதலாக சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு இவரது முகம் பரீட்சையமானது. அதற்கடுத்து கதாநாயகனாக இவர் நடிகை ஹன்சிகாவுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் திரைத்துறையில் தனது கவனத்தை அதீதமாக செலுத்தி கொண்டே வந்தார். பல படங்களை தேர்வு செய்து சற்று வித்தியாசமான முறையிலே நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தார். நடிப்பதில் மட்டுமல்லாது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தையும் கவனித்து நல்ல படங்களை வெளியிடும் உரிமைகளை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தி மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ளார். இதனிடையே சில பல காரணங்களால் நடிப்பதில் இருந்து விலகி தற்போது தமிழ்நாடு மாநிலத்தின் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு மக்கள் பணியை தொடங்கி வருகிறார். இதற்கிடையே இவரது நடிப்பில் எஞ்சியிருக்கும் கண்ணை நம்பாதே மற்றும் மாமன்னன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மட்டும் உதயநிதி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் வரும் மார்ச் 17 ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரைலர் , டீசர் என அனைத்தும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக உதயநிதி ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது இத்திரைப்படத்தில் நடித்திருந்த அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்டார் உதயநிதிஸ்டாலின்.
அதில் ‘’கண்ணை நம்பாதே’ திரைப்படம் உருவான விதம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலாக இருந்தது. எதிர்பாராத பல சவால்களுக்கு மத்தியில் இதனை திரைப்படமாக்கியிருக்கிறோம். அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் பார்த்தப் பிறகு மு.மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று ஆசைப்பட்டு அவரிடம் சென்றதற்கு முதலில் எனக்கு ஓர் எமோஷ்னல் மிகுந்த திரைக்கதையை கூறினார், அவருக்கு பல ஜானர்களில் திரைப்படம் இயக்குவதற்கு ஆர்வம் இருந்தது, ஆனால் அவரின் முதல் திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதனைப்போலவே ஒரு க்ரைம் கலந்த மிஸ்ட்ரி த்ரில்லர் திரைக்கதையை உருவாக்குமாறு வேண்டுக்கோள் வைத்தேன்.
இதனை தொடர்ந்து தான் கண்ணை நம்பாதே திரைப்படத்தின் கதையை கூறினார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனடியாக படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை செய்தோம், இருப்பினும் இதற்கிடையே கொரோனா பரவல், அரசியல் என சில பல காரணங்கள் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் தாமதமாகிக் கொண்டே போனது. ஆனால் இயக்குநர் மிகவும் பொறுமையாகவே அனைத்தையும் கையாண்டார். அனைவரும் இத்திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள், பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் அதுவும் சாலையோரங்களில் தான் படமாக்கப்பட்டது. அனைத்து தடைகளையும் கடந்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்றார். மேலும் மிஸ்ட்ரி த்ரில்லர் கதைக்குத் தேவையான விஷயங்களை இதில் கொடுத்துள்ளனர், ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும்படியான எதிர்பாராத ட்விஸ்ட் மற்றும் ஆச்சரியங்கள் நிச்சயம் இருக்கும் என்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.