கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்த சூர்யா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின்னதாக இவர் வணங்கான் மற்றும் வாடிவாசல் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கும் , பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் பாலாவும் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகுவதாகவும் , தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வணங்கான் படப்பிடிப்புகள் தொடங்கும் என அறிவித்திருந்த பாலா நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வணங்கான் மீது இருந்த ரசிகர்களின் கவனம் வாடிவாசல் திரைப்படம் மீது திரும்பிய நிலையில் , தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் வாடிவாசல் திரைப்படத்தில் இருந்தும் சூர்யா விலக இருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.