ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பத்து தல.
இத்திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் , கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் டீஸர், டிரெயிலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இதற்கு முன்னதாக சூர்யாவை வைத்து ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பத்து தல திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதற்காக சிம்புவின் ரசிகர்கள் படையெடுத்து திரண்டனர். இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்ட முறையில் வெளியிட இருக்கிறது. இதனிடையே படக்குழு புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் படக்குழு புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார், அதில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் , பல சுவாரஸ்யங்களை பகிருந்திருக்கிறார். அவ்வப்போது செய்தியாளர் சிம்வுக்கும் உங்களுகுக்குமான பிரச்சனை என சமூக வலைத்தளங்களில் எழுந்து வருவது குறித்து கேட்டதற்கு , பதிலளித்த அவர், சிம்பு ஒரு நல்ல மனிதர் , அவருடன் இத்திரைப்படத்தில் மிக மகிச்சியாக பணியாற்றினேன். 18 வருடங்களாக எனக்கு சின்வுவை தெரியும் ஒரே மாதிரியாக தான் பழகி கொண்டிருக்கிறோம், சமூக வலைத்தளங்களில் வீணாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சுலபமாகவே முடித்து கொள்வோம், சமூக வலைத்தளங்களில் பலர் பரப்பும் அளவிற்கு எல்லாம் எங்களுக்குள் ஒன்றுமே இல்லை என்றார்.