தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
சமீப காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் சிம்பு, மீண்டும் நடிப்பதில் களமிறங்கியுள்ளார். இதற்கான வேலைகளில் நடிகர் சிம்பு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
மாநாடு திரைப்படம் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றியாக சிம்புவுக்கு அமைந்தது, அதனை தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து அத்திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் சினிமாவுக்கு வந்து பழைய நிலையை சாதரணமாக எட்டியுள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் கம்பேக் கொடுத்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இவர் புதிதாக நடித்து வரும் பத்து தல திரைப்படமும் மக்களிடையே வரவேற்பு பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.கன்னட திரைப்படத்தின் ரீமேக்காக பத்து தல திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு மீண்டும் உடல் எடையை குறைத்து ஏற்றி வருகிறார்.
சிம்பு நடிப்பதில் ஆர்வம் காட்டி நடித்து வந்தாலும், பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அனைத்துமே சிம்புவின் திருமணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் சில கதாநாயகர்கள் இன்னமும் சினிமாத்துறையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள் , அதில் நடிகர் சிம்பு மற்றும் விஷால் போன்றோர் முதல் இடத்தை பிடித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில் சில பல கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணம் நின்று போனது, இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. நடிகர் சிம்புவின் திருமணத்திற்காக அவர்கள் பெற்றோர்கள் பெண் பார்த்து வருவது என்னமோ உண்மையாக இருந்தாலும், சில வதந்திகளும் பரபப்பட்டு வருகின்றன.
அதன்படி வந்த தகவலொன்றில் நடிகர் சிம்பு இலங்கையை சார்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை கரம்பிடிக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலானது. இது குறித்து சிம்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சிம்புவின் மேலாளர் தரப்பில் இருந்து வெளியான தகவலொன்றில், இலங்கை தமிழ் பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக சில செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் செய்தியை பார்த்தோம், அவையாவும் உண்மையல்ல அதனை முற்றிலும் மறுக்கிறோம். நடிகர் சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் நாங்களே முதற்கட்டமாக உங்களுக்கு தெரிவிப்போம் பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்திடுங்கள் என தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.